குன்னூர் அருகே அரசு பஸ்சின் டயரில் தீ பிடித்தது: பயணிகள் தப்பினர்
குன்னூர்: குன்னூர் அருகே அரசு பேருந்தில் திடீரென தீப் பிடித்துக் கொண்டது. ஆனால், இந்த விபத்தில் 70 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நேற்றிரவு குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு அந்த பஸ் சென்று கொண்டிருந்தது. 9 மணி அளவில் கல்லார் என்ற இடத்தில் சென்றபோது பஸ்சின் பின்பக்கம் இருந்து புகை கிளம்பியது.
உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தி இறங்கி வந்து பார்த்தபோது பேருந்தின் டயர் தீப்பிடித்து எரிவது தெரிந்தது. இதையடுத்து பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து கீழே குதித்தனர்.
பின்னர் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் உதவியுடன் அருகில் இருந்த ஓடையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தீ அணைக்கப்பட்டது. தீ மேலும் பரவி டீசல் டேங்கில் பிடித்திருந்தால் பலர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கக் கூடும்.
பயணிகள் துரிதமாக செயல்பட்டதால் பேருந்தில் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.
பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு பேருந்துகள் சரியாக பராமரிக்கப்படாதே இதற்கு காரணம் என்று பயணிகள் குற்றம் சாட்டினர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications