போகி: சென்னையில் பெரும் புகை மூட்டம்
சென்னை: போகி பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. போகி புகை காரணமாக சென்னை நகர் முழுவதும் பெரும் புகை மூட்டமாக காணப்பட்டது.
பொங்கல் பண்டிகையின் முதல் நாள் விழா போகி. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற வழக்கப்படி, பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி, பொங்கல் திருநாளை வரவேற்கும் விதமாக போகி கொண்டாடப்படுகிறது.
இந்த போகி பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. நேற்றே வீடுகளை சுத்தம் செய்து, பழைய பொருட்களை சேகரித்து வைத்திருந்த மக்கள் இன்று அதிகாலை, அவற்றை வீடுகளுக்கு முன்பு தீயிட்டுக் கொளுத்தினர்.
போகியின் போது தீவைத்து எரிக்கப்பட்ட பொருட்களிலிருந்து வந்த புகையால் சென்னை நகர் முழுவதும் பெரும் புகை மூட்டமாக காணப்பட்டது. ஏற்கனவே பனி வேறு நிலவியதால் இந்தப் புகையும் சேர்ந்து பெரும் புகை மண்டலமாக மாறியது சென்னை.
முன்னதாக பிளாஸ்டிக், பாலித்தீன், டயர்களை கொளுத்தக் கூடாது என சென்னை காவல்துறை எச்சரித்திருந்தது. இதேபோன்ற உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பொங்கல் பாதுகாப்புக்கு 5000 போலீஸார்:
இதற்கிடையே, பொங்கல் பண்டிகை இன்று தொடங்கி இந்த வார இறுதி வரை நீடிப்பதால் பாதுகாப்புப் பணிக்கு 5000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் வெகு பிரபலமான காணும் பொங்கல் வருகிற 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் நகரில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரைப் பகுதிகளில் குதிரைப்படை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பல இடங்களில் பொருத்தப்படவுள்ளன.
காணும் பொங்கலன்று கடலில் குளிக்கவும் போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications