தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது - அப்பாதுரை எம்.பி.
Subscribe to Oneindia Tamil

தென்காசி: தேர்தல் சமயத்தில் தொழிற்சாலை அமைக்க முயற்சி செய்வேன் என்றுதான் கூறினேன். நிறைவேற்றுவதற்கு நான் ஒன்றும் அமைச்சரில்லை. தென்காசி பகுதியில் தொழிற்சாலை அமைக்க சாத்திய கூறுகளும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி அப்பாத்துரை அதிரடியாக கூறியுள்ளார்.
தென்காசியில் செய்தியாளர்களிடம் அப்பாத்துரை பேசுகையில், நீண்ட நாள் கோரிக்கையான செங்கோட்டை அகல ரயில் பாதை பணிகளும், ஆய்வும் முடிந்து விட்டது. விரைவில் ரயில் இயக்குவதற்கான தேதி அறிவிக்கப்படும். கலப்பு ரயில் பாதையாக அமைக்கப்பட்டதால் காலதாமதம் ஏற்பட்டது.
40 ஆண்டுகளாக ரயில்வே துறையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தென்காசி ரயில்வே கேட் ரயில்கள் எதுவும் செல்லாத நிலையிலும் அடைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் சமயத்தில் தொழிற்சாலைகள் அமைக்க முயற்சி செய்வேன் என்றுதான் கூறினேன். நிறைவேற்றுவதற்கு நான் ஒன்றும் அமைச்சர் இல்லை. தென்காசியில் தொழிற்சாலைகளை அமைக்க சாத்தியக் கூறுகளும் இல்லை என்றார் அப்பாத்துரை.
தேர்தல் வாக்குறுதி குறித்து எம்.பி. தடாலடியாக கூறியுள்ளது தென்காசி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
