மோடியை எதிர்த்து போராட்டம்: நூற்றுக்கணக்கானோர் கைது
சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் வருகையைக் கண்டித்து சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இவற்றில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னைக்கு வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்திருந்ன. மோடி வருகையை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாகவும் அவை அறிவித்திருந்தன.
இந்த நிலையில் இன்று காலை மோடி திட்டமிட்டபடி சென்னைக்கு வந்தார். இதையடுத்து மோடியின் வருகையை எதிர்த்து சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
வட சென்னை மாவட்ட செயலாளர் சண்முகம், எம்.எல்.ஏ மகேந்திரன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மோடி உருவப் படத்துடன் கூடிய எலும்புக் கூடு படங்களுடன் வந்திருந்தனர். ரத்தக் கறை படிந்த கரங்களுடன் மோடி சென்னைக்கு வரக் கூடாது. அவருக்கு விருந்தளிக்கும் ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவித்தும் கூட்டத்தினர் கோஷமிட்டனர்.
தடையை மீறி நடந்த போராட்டம் என்பதால் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல சைதாப்பேட்டை பனகல் மாளிகை எதிரேயும் 20 பெண்கள் உள்பட 125 பேர் போராட்டம் நடத்தினர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல மதுரையில் அருந்ததியர் அமைப்பின் சார்பில் மோடியின் வருகையை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இதேபோல கடந்த 2 நாட்களாக பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் மோடியை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருகின்றன.
மாலையில் முற்றுகை:
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட 12 அமைப்புகள் இணைந்து அமைக்கப்பட்டுள்ள பாசிச எதிர்ப்பு முன்னணி சார்பில் இன்று மாலை காமராசர் அரங்கில் நடைபெறும் துக்ளக் இதழ் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வரும் மோடியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளதால் காமராசர் அரங்கப் பகுதியில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications