இந்தியர்களைத் திட்டிய சவூதி விமான பயணியால் பரபரப்பு
சென்னை: மும்பை - சென்னை இடையிலான ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த சவூதியைச் சேர்ந்த பயணி குடிபோதையில் சக பயணிகளுடன் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று இரவு மும்பையிலிருந்து பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்னைக்கு வந்தது. அதில் அல்டோசாரி முகம்மது (49) என்கிற சவூதி அரேபிய பயணி பயணித்தார்.
குடிபோதையில் இருந்த அவர் சவூதியில் பணியாற்றும் இந்தியர்கள் குறித்து அவதூறாகப் பேசினார். மேலும், இந்தியர்களால் சவூதி அரேபியர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சத்தம் போட்டு திட்டினார்.
இந்த நிலையில் விமானம் இரவு 11 மணிக்கு சென்னையை வந்தடைந்தது. விமானம் தரையிறங்கியதும், விமானத்தில் பயணித்த கேரளாவைச் சேர்நத் அபூபக்கர் பாரி என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் அல்டோசாரி முகம்மதுவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதனை நடத்தினர்.
இந்த நிலையில் காலையில் போதை முற்றிலும் தெளிந்த முகம்மது, தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார். அபூபரக்கர் பாரியிடமும் மன்னிப்பு கேட்டார்.
இதையடுத்து அபூபக்கர் பாரி தனது புகாரைத் திரும்பப் பெற்றார். இதையடுத்து முகம்மதுவை கடுமையாக எச்சரித்து போலீஸார் அவரை அனுப்பி வைத்தனர்.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications