ஜல்லிக்கட்டு: காரைக்குடியில் கறுப்புக் கொடி போராட்டம் நடத்த முடிவு
காரைக்குடி: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்குடி பகுதியில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தடை விதித்தது.
இதனால் வழக்கமாக ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறும் முக்கிய கிராமங்கான அலங்காநல்லூர், பாலமேடு, சிராவய்ல உட்பட பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் வலுத்து வருகிறது. கடையடைப்பு, உண்ணாவிரதம், கண்டன சுவரொட்டிகள் என போராட்டம் தொடர்ந்த வண்ணமாக உள்ளது.
இதற்கிடையே மாவட்ட கலெக்டர்கள் சம்பந்தப்பட்ட கிராமமக்கள், போட்டியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அவமதிப்பு ஏற்படாதவாறு செயல்பட வேண்டும் என்று வற்புத்தி வருகிறார்கள்.
ஆனால் கிராம மக்களோ இதற்கெல்லாம் செவி சாய்ப்பதாகவே தெரியவில்லை. இந்நிலையில் காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டர் தாரேஸ் அகமது கிராம முக்கிய பிரமுகர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பொதுமக்கள் ஜல்லிக்கட்டு பாரம்பரிய உரிமை. போட்டியை நிறுத்தினால் தெய்வகுற்றமாகி விடும் என்று ஆவேச குரல் எழுப்பினர். பொது மக்களின் எதிர்ப்பை கண்டு என்னசெய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் விழித்தனர்.
கறுப்புக்கொடி ஏற்றுவோம்:
மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு, எங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில் கறுப்புக் கொடி ஏற்றுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள் அதிகாரிகள் சொல்வதையே கேட்கவில்லை. நீங்கள் சொல்வதை சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால் நாங்கள் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியே தீருவோம் என பிடிவாதமாக கூறிவிட்டு வெளிநடப்பு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொசப்பட்டி கிராமத்தில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைக் கண்டித்து காளை மாடுகளுடன் கருப்புக் கொடி ஊர்வலத்தை நடத்தினர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications