அலங்காநல்லூரில் இன்றும் கடையடைப்பு - உண்ணாவிரதம்
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கக் கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு கிராமங்களில் இன்றும் உண்ணாவிரதம் நடந்து வருகிறது. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன அலங்காநல்லூரில், அப்போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் பெரும் அதிர்ச்சியும், சோகமும் நிலவுகிறது. நேற்று காலை அலங்காநல்லூரில் தொடர் உண்ணாவிரதத்தை கிராம மக்கள் தொடங்கியுள்ளனர்.
கடந்த 2 நாட்களாக கடையடைப்பு நடந்து வந்தது. நேற்று காலை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அலங்காநல்லூர் மக்கள் தொடங்கினர். இதில் குடும்பத்துடன் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல அருகில் உள்ள பாலமேடு கிராமத்திலும் உண்ணாவிரதம் தொடங்கியது.
இந்த நிலையில் 2வது நாளாக இன்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இரு கிராம மக்களும் கடைகளை அடைத்து வைத்து சோகத்துடன் ஜல்லிக்கட்டு குறித்துப் பேசியவண்ணம் உள்ளனர்.
20 கிராமங்களில் ஜல்லிக்கட்டு - மேலூர் அருகே பரபரப்பு
இதற்கிடையே, மேலூர் அருகே உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அதிரடியாக ஜல்லிக்கட்டை நடத்த தீர்மானித்துள்ளன.
இதற்காக காளை மாடுகளை தயார் செய்து வரும் அவர்கள் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டை நடத்துவோம். காளைகளை ஜல்லிக்கட்டு தினத்தன்று அவிழ்த்து விடுவோம். அதை அடக்க வீரர்கள் தயாராக உள்ளனர். முடிந்தால் போலீஸார் மாடுகளைப் பிடித்து அதை தடுத்துக் கொள்ளட்டும் என்று படு தில்லாக கூறி வருகின்றனர்.
இதனால் மேலூர் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications