களை கட்டுகிறது பொங்கல்-பானை, கரும்பு வியாபாரம் மும்முரம்

சென்னை: பொங்கல் திருநாளையொட்டி தமிழகம் முழுவதும் பொங்கல் உற்சாகம் களை கட்டியுள்ளது. மாநிலம் முழுவதும் கரும்பு, மண்பானைகள், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களின் வியாபாரம் படு சூடாக நடந்து வருகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கள் பண்டிகை உலகெங்கும் உள்ள தமிழர்களால் நாளை கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக வீட்டை சுத்தப்படுத்தி, பழைய பொருட்களை கழித்து நடத்தப்படும் போகி இன்று நடந்தது.
இந்த நிலையில் பொங்கலுக்கான ஏற்பாடுகளில் மக்கள் படு மும்முரமாக உள்ளனர். வீடுகளில் கோலமிடுவது, பானைகள் வாங்குவது, கரும்பு உள்ளிட்டவற்றை வாங்குவது என மக்கள் பிசியாக உள்ளனர்.
தமிழகம் முழுவதும் குறிப்பாக கிராமப்புறங்களில் பொங்கலை வரவேற்க தடபுடலான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தலைநகர் சென்னை முதல் கடைக்கோடி ராமநாதபுரம், கன்னியாகுமரி வரை பொங்கல் உற்சாகம் களை கட்டியுள்ளது.
இந்த ஆண்டு கரும்புகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன. கடந்த முறையைப் போலவே இந்த முறையும் சற்றே விலை அதிகமாக உள்ளது.
சென்னைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்துள்ள கரும்புகள் லாரி லாரியாக கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் இறங்கியுள்ளன. இவற்றை நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் வியாபாரிகள் அனுப்பி வருகின்றனர்.
சென்னை நகர் முழுவதும் கரும்பு விற்பனை சூடாக நடந்து வருகிறது. தி.நகரில் பொங்கல் பொருட்களை வாங்க பெரும் கூட்டமாக இருப்பதால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications