அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நாங்கள் நடத்துவோம்-திருமாவளவன்
மதுரை: கிராம மக்கள் அனுமதித்தால் உச்சநீதிமன்றம் விதித்த தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஜல்லிக்கட்டை நடத்தும் என்றும் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்கக் கோரி அலங்காநல்லூர் கிராம மக்கள் சார்பாக அங்கு கடந்த 2 நாட்களாக உண்ணாவிரதம் நடந்து வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு திருமாவளவன் பேசியதாவது,
இந்த உண்ணாவிரதம் உச்சநீதிமன்றம் விதித்த தடையை அகற்றக் கோரி நடைபெறுகிறது. உலகம் முழுவதும் வாழும் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டுகளில் ஒன்றுதான் ஜல்லிக்கட்டு.
தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் காலப்போக்கில் காணாமல் போனாலும், எஞ்சியிருப்பது இந்த பழமையான ஜல்லிக்கட்டு தான். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்த பெற்றது. தமிழ் மக்கள் தவிர பிற மதத்தினரும் போற்றி பாராட்டும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி அவசியம் நடக்க வேண்டும்.
கடந்த 2 வருடங்களாக இந்த விழாவுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
அலங்காநல்லூர் கிராம பொதுமக்கள் அனுமதிப்பார்களேயானால், குறிப்பிட்ட நாளில் ஜல்லிக்கட்டை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு நடத்த முன்வரும் என இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவிக்கிறேன். பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்துவதில் கூட பாதிப்புகள் வரலாம். உயிர்ச்சேதம் ஏற்படவும் கூட வாய்ப்புள்ளது. அதற்காக அவற்றை தடை செய்கிறோமா.
இந்த உண்ணாவிரதத்தில் பெண்கள் திரளாக கலந்து கொண்டிருப்பதை பார்க்கிறபோது, எத்தனை பாதிப்பு வந்தாலும், சேதங்கள் வந்தாலும், ஜல்லிக்கட்டுக்கு தயார் நிலையில் எங்கள் பிள்ளைகளை அனுப்புவோம் எனக் கூறத்தான் அவர்கள் இதில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என நம்புகிறோம்.
எதற்கும் அஞ்சாத ஊர், வீர விளையாட்டுக்கு முன் மாதிரியான ஊர். புறநானூற்று காலத்தில் கூறப்பட்டுள்ள பெருமையை நிலைநாட்டும் ஊர் அலங்காநல்லூர். பாரம்பரியம் பட்டுப்போகாமல் ஜல்லிக்கட்டு விழா நடத்த வேண்டும் என்றார் திருமாவளவன்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications