இந்தியா-சீன வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டும்: மன்மோகன்சிங்

Subscribe to Oneindia Tamil


பீஜிங்: இந்தியா-சீனா நாடுகளுக்கிடையே வர்த்தக தொழில் உறவை மேம்படுத்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் 3 நாட்கள் பயணமாக சீனா சென்றுள்ளார். சீன பிரதமர் வென் ஜியாபோ, மன்மோகன் சிங்குக்கு விருந்தளித்தார்.

இன்று இந்திய-சீனா வர்த்தக பொருளாதார உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 400க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசியதாவது,

இந்தியா-சீனா இடையே வர்த்தக தொழில் உறவை மேம்படுத்த வேண்டும். வர்த்தகம் தொடர்பான இடையூறுகளை அகற்ற இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளும்.

தகவல் தொடர்பு துறையில் இரு நாடுகளும் தங்கள் வர்த்தகத்தை பெருக்கிக் கொள்ள பல்வேறு வாய்ப்புகள் உள்ளன என்றார் பிரதமர்.

இந்த பயணத்தின் போது இரு நாடுகளிடையே முக்கியமான 5 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின்றன.

முக்கியமாக இரு நாடுகளின் எல்லை பிரச்சனை குறித்து மன்மோகன்சிங் அந்நாட்டு பிரதமர் வென் ஜியாபோவுடன் முக்கியமாக ஆலோசனை நடத்துகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+