சபரிமலை-வேன் கவிழ்ந்து 5 தமிழக பக்தர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு ஊர் திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் வந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலியாயினர்.

சென்னை முகப்பேர் 4வது பிளாக்கை சேர்ந்த ரவி என்பவர் தலைமையில் 25 பேர் சபரிமலைக்கு வேன் மூலம் புனித யாத்திரை சென்றனர். தரிசனத்தை முடித்துக் கொண்டு
இவர்கள் வந்த வேன் பம்பாவேலி என்ற இடத்தில் சாலையோரம் இருந்த 75 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் வேனில் இருந்த ரவி (40), ஜோதி(48), ஜீவம்மா (74), பாபு (40) மற்றும் வேன் டிரைவர் ரஹீம் (51) ஆகிய 5 பேரும் பலியாயினர்.

மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பள்ளத்தில் கிடந்த வேனை மீட்டனர். காயமடைந்த அனைவரும் எரிமேலி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வேனை டிரைவர் அதிவேகத்தில் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+