100 வருடங்களாக பொங்கல் கொண்டாடாத கிராமம்!
நாமக்கல்: நாமக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 100 வருடங்களாக பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் உள்ளனர்.
நாமக்கல் அருகே உள்ளது சிங்கிலிப்பட்டி. இந்த கிராம மக்கள் தான் கடந்த 100 ஆண்டுகளாக பொங்கலை புறக்கணித்து வருகின்றனர்.
காரணம், 100 ஆண்டுகளுக்கு முன் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பொது இடமான அம்மன் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு செய்துள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக பூஜைல் வைக்கப்பட்டிருந்த பொங்கலை ஒரு நாய் சாப்பிட்டு விட்டதாம். இதனால் ஊருக்கு ஆபத்து வருமென கிராமத்தில் உள்ள முதியவர்கள் கூறியுள்ளனர்.
அடுத்த ஆண்டும், இதே போன்று பொங்கல் தினத்தன்று ஊரில் உள்ள ஒரு மாடு இறந்து விட்டது. இதனால் இதில் பயந்து போன கிராம மக்கள் இந்த சம்பவத்தை கெட்ட சகுனமாக கருதினர்.
மேலும், பொங்கல் பண்டிகையை தொடர்ந்து கொண்டாடினால் ஊருக்கும், மக்களுக்கும் ஏதாவது கெட்டது நேர்ந்து விடுமோ என அஞ்சி பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது இல்லை என முடிவு செய்தனராம்.
இப்படியாக 100 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இன்னும் கூட இந்த சிறிய ஊரில் பொங்கலை யாரும் கொண்டாருவதில்லை.
இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த 96 வயதான முனியப்பன் என்பவர் கூறுகையில், எனது தாத்தன், பாட்டன், காலத்தில் இருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாடுவது இல்லை. காரணம், பொங்கல் பூஜையில் நாய் புகுந்ததால் அதை கெட்ட சகுனமாக எண்ணி அன்று முதல் பொங்கல் பண்டிகை வைப்பதில்லை.
மேலும் மீறி செய்தால் கிராமத்திற்கும், ஊரில் உள்ள மக்களுக்கும் கெடுதல் வரும் என அன்று குடுகுடுப்பைக்காரர் கூறினாராம். அதனால் எதுக்கு வம்பு என யாரும் அது பற்றி கவலைப்படுவதில்லை, தம்பி என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications