பஸ் மோதி அதிமுக கிளைச் செயலாளர் பலி
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி: கழுகுமலை அருகே பஸ் மோதியதில் அதிமுக கிளைச் செயலாளர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகேயுள்ள கே.துரைசாமியாபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அப்பகுதியில் அதிமுக கிளைச் செயலாளராக இருந்தார்.
கோவில்பட்டியில் இருந்து தனது பைக்கில் கழுகுமலைக்கு சென்று கொண்டிருந்தார். மகேந்திரன் சங்கரலிங்கபுரம் விலக்கு அருகே வந்தபோது சங்கரன்கோவிலில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த பஸ் அவர் மீது பலமாக மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.












Click it and Unblock the Notifications