தொடரும் கேரள ஆதிக்கம்-தமிழகம் விடுபடுமா?

சேலம்: கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு போராடிப் பெற்ற சேலம் ரயில்வே கோட்டம், பாலக்காட்டின் பிடியில் இருந்து முழுமையாக மீளாத பரிதாபத்தில் உள்ளது.
சேலம் ரயில் கோட்டம் உருவாகிவிட்டாலும் இந்த வழியாகச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் எமர்ஜென்சி கோட்டாவின்' (இ.க்யூ) கீழ் டிக்கெட்களைப் பெற கேரளத்தின் பாலக்காடு கோட்ட அதிகாரிகளைத் தான் நாட வேண்டிய நிலை நிலவுகிறது.
பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழக ரயில்வே பகுதிகளைப் பிரித்து சேலம் கோட்டம் உருவாக்க திட்டமிட்டவுடன் கேரள அரசியல்வாதிகள் வானுக்கும் தரைக்குமாக குதித்தனர்.
தென்னக ரயில்வேயில் உள்ள மலையாள அதிகாரிகளின் துணையோடு இத் திட்டத்தை முடக்க தீவிரமாக முயன்றனர். இவர்களுக்கு டெல்லியில் உள்ள ரயில்வே உயர் அதிகாரிகள் சிலரும் (இவர்களும் மலையாளிகளே) உடந்தையாக இருந்தனர்.
ஆனால், ஒரு வழியாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் ரயில்வே இணையமைச்சர் வேலுவின் பிடிவாதத்தால் அமைச்சர் லாலுவுக்கு நிர்பந்தம் தரப்பட்டு கோட்டம் பிரிக்கப்பட்டது.
ஆனாலும் பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளை பாலக்காட்டிடம் தமிழகம் இழந்தது.
இப்போது சேலம் கோட்டம் உருவாகி இரு மாதங்கள் ஓடிவிட்டாலும் பாலக்காட்டின் ஆதிக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.
குறிப்பாக சேலம் வழியாகச் செல்லும் ரயில்களில் எமர்ஜென்சி கோட்டாவை' பாலக்காடு தனது ஆதிக்கத்தில் தொடர்ந்து வைத்துக் கொண்டுள்ளது. மிக அவசரமான காரியங்களுக்காக ரயில்வேயில் முன்பதிவு செய்ய உதவுவது தான் 'இ.க்யூ' எனப்படும் 'எமர்ஜென்சி கோட்டா'.
இந்த கோட்டாவின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் டிக்கெட் வாங்குவது குதிரைக் கொம்பாகிவுள்ளது. இந்த கோட்டாவின் கீழ் வரும் டிக்கெட்டுகளை பாலக்காடு கோட்ட அதிகாரிகளே லவட்டிக் கொண்டு வருகின்றனர்.
இதனால் தமிழகம் வழியாக செல்லும் 23 ரயில்களில் இ.க்யூ கோட்டாவால் கேரளத்தைச் சேர்ந்தவர்களே பலனடைந்து வருகின்றனர்.
இந்த கோட்டாவின் கீழ் பொது மக்கள், பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல தமிழக எம்.பி, எம்எல்ஏக்கள் கூட டிக்கெட் பெற முடியவில்லையாம். அந்த அளவுக்கு கேரளம் அதிகாரிகள் ஆதிக்க தாண்டவம் ஆடி வருகிறது.
இது குறித்து தமிழக காங்கிரஸ் எம்பி கார்வேந்தன் அனுப்பியுள்ள கடிதத்தில்,
கோவை, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மூன்று முக்கிய நகரங்களை உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில்களில் இ.க்யூ வசதி பெற இன்னும் பாலக்காட்டையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்தில் 22 ரயில்களுக்கு மட்டுமே இ.க்யூ வசதி உள்ளது. ராஜ்கோட் எக்ஸ்பிரஸ், கோவை குர்லா எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், பெங்களூர்-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், ஜனசதாப்தி, கொங்கு எக்ஸ்பிரஸ், கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், உள்ளிட்ட ரயில்களுக்கு மட்டுமே சேலத்தில் இ.கியூ. வசதி பெற முடிகிறது.
ஆனால், சென்னை-மங்களூர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி-மும்பை எக்ஸ்பிரஸ், டெல்லி-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், சென்னை-மங்களூரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஆழப்புழா-சென்னை எக்ஸ்பிரஸ், மங்களூர்-சென்னை மெயில், திருச்சி-எர்ணாகுளம் டீ கார்டன் எக்ஸ்பிரஸ், சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-சென்னை மெயில், திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ், சென்னை-மங்களூர் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ், ஆழப்புழா-பொக்காரோ ஸ்டீல் சிட்டி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி-மைசூர் ஐலேண்டு எக்ஸ்பிரஸ்,
எர்ணாகுளம்-பெங்களூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-கோர்பா எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-இந்தூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-கெளஹாத்தி எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-பாட்னா எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-மும்பை எக்ஸ்பிரஸ், கொச்சுவழி-பெங்களூரு எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ஆகிய 23 ரயில்களுக்கு சேலம் கோட்டத்தில் முன்பதிவு இ.க்யூ வசதி இல்லை.
இந்த ரயில்களுக்கு இ.க்யூ மூலம் முன்பதிவு செய்ய பாலக்காடு தான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது என்று கூறியுள்ளார் கார்வேந்தன்.
கேரளத்தின் ஆதிக்கத்தில் இருந்து தமிழகம் என்று விடுபடுமோ?
-
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications