சேது சமுத்திர திட்டம்-மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு!
டெல்லி: சேது சமுத்திரத் திட்டத்தின் நிலை குறித்த மத்திய அரசின் நிலையை 2 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து சுப்பிரமணியம் சுவாமி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ராமர் பாலம் இடிக்க இடைக்கால தடை விதித்ததுடன் மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்து பதில் மனு தாக்கல் செய்ய 3 மாத கால அவகாசம் அளித்தது.
இதுதொடர்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ராமர் இருந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அந்த பதில் மனுவை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
இந்த நிலையில் நேற்று சேது சமுத்திர திட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. நேற்று மத்திய அரசு தனது புதிய பதில் மனுவைத் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் உச்சநீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து உச்சநீதிமன்றம் புதிய மனு தாக்கல் செய்வதற்கு மத்திய அரசுக்கு 15 நாள் அவகாசம் அளித்துள்ளது. அதற்குள் சேது சமுத்திரத் திட்டம் குறித்து மத்திய அரசின் நிலை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications