திருச்சியில் எம்ஜிஆர் சிலை அருகே அதிமுக-தேமுதிக அடிதடி
திருச்சி: திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாகவும், கொடிகள் கட்டுவது தொடர்பாகவும் அதிமுகவினரும் தேமுதிகவினரும் அடிதடியில் ஈடுபட்டனர்.
எம்.ஜி.ஆர் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.
திருச்சியில் நடந்த மாலை அணிவிப்பின்போது அதிமுகவினருக்கும், தேமுதிகவினருக்கும் இடையே மோதல் மூண்டது.
திருச்சி நீதிமன்றம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரஞ்சோதி தலைமையில் பெரும் திரளான அதிமுகவினர் காலை 11 மணிக்கு வந்தனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த தேமுதிகவினர், தங்களது கட்சிக் கொடிகளை சிலைக்கு அருகே கட்டியிருந்தனர்.
இதைப் பார்த்த அதிமுகவினர் கடும் கோபமடைந்தனர். தேமுதிகவினர் கட்டியிருந்த கொடிகளை கிழித்து எறிந்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டது.
இந் நிலையில் அங்கு வந்த போலீஸார், சொல்லாமல் கொள்ளாமல் ஊர்வலமாக வந்ததாக கூறி தேமுதிகவினரை தடுத்து நிறுத்தி அங்கிருந்து கலைந்து போகக் கூறினர்.
ஆனால் நகராத தேமுதிகவினர் மாலை போடாமல் போக மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியதால், அதிமுகவினர் போன பின்னர் மாலை போட போலீஸார் ஏற்பாடு செய்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications