ஆளுநரின் உறவினர்கள் கார்கள் மீது கல்வீச்சு
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஆளுநர் பர்னாலாவின் உறவினர்கள் சென்ற கார்கள் மீது சரமாரியாக கற்கள் வீசித் தாக்கப்பட்டன. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆளுநர் பர்னாலாவின் உறவினர்களான மன்மோகன் சிங், தர்பூன்சிங், தர்பாரா சிங், சர்நால் சிங், நிதான் சிங் ஆகியோர் கார்களில் ராமேஸ்வரம் வந்தனர். அவர்களுடன் விருதுநகரைச் சேர்ந்த விஜயக்கண்ணன் என்ற வக்கீலும் சென்றிருந்தார்.
ராமேஸ்வரம் போய் விட்டு பரமக்குடி வழியாக அனைவரும் விருதுநகர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, பரமக்குடி ஐடிஐ அருகே சிலர் திடீரென கார்கள் மீது கல்வீசித் தாக்கினர். இதில் கார் கண்ணாடிகள் உடைந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரான சந்திரசேகரன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் ஊர் திரும்பினார். இதையொட்டி நண்பர்களுக்கு மது விருந்து அளித்தார். அப்போது திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்தத் தகராறில் சாலைக்கு வந்த அவர்கள் சாலையில் சென்ற ஆளுநரின் உறவினர்கள் கார்கள் மீது கற்களை வீசித் தாக்கினர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications