போலி பாஸ்போர்ட்-விமான நிலையத்தில் இலங்கை தமிழர் கைது
சென்னை: போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையிலிருந்து கனடா செல்ல முயன்ற இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டார்.
இலங்கை நுவரேலியா பகுதியைச் சேர்ந்தவர் துளசிதரன் (வயது 27). இவர் நேற்று முன்தினம் இரவு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் கனடா செல்ல வந்தார்.
அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்த குடியுரிமைத்துறை அதிகாரிகள் அது போலியானது என கண்டு பிடித்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விமான நிலைய உதவி கமிஷனர் குப்புசாமியிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமணன் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் ஒப்படைத்தார். விசாரணையில், துளசிதரன் இலங்கையிலிருந்து கள்ளத்தோணி மூலம் ராமேஸ்வரம் வந்தது தெரிய வந்தது.
மேலும் சென்னைக்கு வந்து போலி பாஸ்போர்ட்டை துளசிதரன் தயாரித் துள்ளார். அந்த போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி சென்னையிலிருந்து சிங்கப்பூர் வழியாக கனடா செல்ல துளசிதரன் முயற்சித்துள்ளார் என்றும் தெரிய வந்தது.
இதைதொடர்ந்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு துளசிதரன் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications