சிறுமி பலி-7 குயீன்ஸ்லேண்ட் சிறுவர் பூங்கா ஊழியர்கள் கைது
சென்னை: பூந்தமல்லி அருகே உள்ள குயீன்ஸ்லேண்ட் சிறுவர் பூங்காவில் உள்ள செயற்கைக் குளத்தில் விழுந்து மூழ்கி 11 வயது சிறுமி பலியான விவகாரத்தில் பூங்கா ஊழியர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அருகே உள்ளது இந்த குயீன்ஸ்லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க்.
இங்குள்ள செயற்கை குளத்தில் படகுகளில் மக்கள் சவாரி செய்து கொண்டிருந்தனர். 15 பேர் சென்ற ஒரு படகின் பின் புறமாக இன்னொரு படகு இடித்தது.
இதில் முதல் படகு கவிழ்ந்ததில் அதிலிருந்தவர்கள் நீருக்குள் விழுந்தனர். அவர்களில் சில நீந்தி கரையேறினர். மற்றவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டனர்.
ஆனால், மேடவாக்கத்தைச் சேர்ந்த ராஜ் என்பவரின் மகள் அனுசுயா (11) நீருக்குள் மூழ்கி மூச்சுத்திணறி இறந்துவிட்டார்.
8 அடி ஆழம் கொண்ட அந்தக் குளத்தில் ேபாதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை.
விபத்து குறித்து அறிந்தவுடன் நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் ரியாசுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
படகு டிரைவர்கள் ஜெகநாதன், முனுசாமி, படகு உதவியாளர்கள் ஆனந்த், செல்வம், மேலாளர்கள் மணிகண்டன், சோமசுந்தரம், துணைப் பொது மேலாளர் ஷிபான் பான் (50) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications