'கருணாநிதி கைது புகழ்' முத்துக்கருப்பனுக்கு மீண்டும் பதவி

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில், கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தவரும், கடந்த 4 ஆண்டுகளாகவே காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தவருமான ஐஜி முத்துக்கருப்பன் கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி அதிமுக ஆட்சியில் திமுக தலைவர் கருணாநிதி நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அப்போது சென்னை மாநக காவல்துறை ஆணையராக இருந்தவர் முத்துக்கருப்பன்.
(இவரை இந்தப் பதவிக்குக் கொண்டு வந்ததே முதல்வராக இருந்த கருணாநிதி தான் என்பது குறிப்பிடத்தக்கது)
அதன் பின்னர் ஜெயலலிதாவுடன் இவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. 2003ம் ஆண்டு இவரை சஸ்பெண்ட் செய்தார் ஜெயலலிதா.
பின்னர் வந்த திமுக ஆட்சியில் முத்துக்கருப்பன் அவர் பதவி எதுவும் வழங்கப்படாமல் தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்.
ஒரு முறை முதல்வர் கருணாநிதியை நேரிலும் போய் பார்த்து கண்கலங்கிவிட்டு வந்தார். ஆனாலும் பதவி தரப்படவில்லை.
இந் நிைலயில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பின் அவருக்கு இப்போது கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக தலைமைக் கண்காணிப்பு அதிகாரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர மேலும் சில அதிகாரிகளும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
ஏடிஜிபி ராமானுஜம் சென்னை போலீஸ் பயிற்சிக் கல்லூரி ஏடிஜிபியாக நியிமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் சென்னை நகர ஆணையர் நடராஜன், போலீஸ் பயிற்சிக் கல்லூரி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்வாரிய தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநருக்கான முன்னாள் பாதுகாப்பு அதிகாரி (எஸ்.பி.) அஷ்வின் கோத்னிஸ், நாகை மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறையின் 9வது பட்டாலியன் (மணிமுத்தாறு) கமாண்டன்ட் ஆக தமிழ்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகை எஸ்.பியாக இருந்த கல்பனா நாயக் காலியிடப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications