ஷார்ஜாவில் இந்திய ஆசிரியை தற்கொலை
துபாய்: துபாயில் உள்ள இந்தியன் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய 25 வயதுப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மேரி திருமணமாகாதவர். துபாயில் உள்ள இந்தியன் பள்ளியில் அவர் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பள்ளி நிர்வாகம் கொடுத்திருந்த ஷார்ஜா அடுக்கமாடிக் குடியிருப்பில் அவர் தங்கியிருந்தார். புதன்கிழமை மாலை தனது வீட்டில் மின் விசிறியில் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக அவர் மீட்கப்பட்டார்.
அந்த பள்ளியில் பணியாற்றி வந்த 6 ஆசிரியர்களுக்கு அந்த பிளாட்டில் வீடு கொடுக்கப்பட்டிருந்தது. மேரி 2 ஆசிரியைகளுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.
சம்பவ நாளின்போது அவருடன் தங்கியிருந்த இருவரும் வெளியில் சென்றிருந்தனர். அந்த சமயத்தில் மேரி தூங்கிக் கொண்டிருந்தார். மற்ற இருவரும் வீடு திரும்பியபோது, அவர்களது அறையில் உள்ள டேபிளில் ஒரு கடிதம் இருந்தது. அதை மேரிதான் எழுதியுள்ளார்.
சிவப்பு இங்க்கில் தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று அதில் மேரி எழுதியுள்ளார். இதையடுத்து மேரி எங்கே என்று 2 பேரும் தேடிப் பார்த்தனர். அப்போது வீட்டில் உள்ள ஸ்டோர் ரூமில் உள்ள மின் விசிறியில், மேரி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்திருந்தது தெரிய வந்தது.
போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்து மேரியின் உடலை மீட்டனர்.
அவரது செல்போனைக் கைப்பற்றிய போலீஸார், அதிலிருந்து சிம் காணாமல் போயிருந்ததைக் கண்டுபிடித்தனர். அந்த சிம் எங்கே என்று தற்போது விசாரணை நடந்து வருகிறது.
சமீபகாலமாக இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்வது அமீரகத்தில் மட்டுமன்றி வளைகுடாவின் பல்வேறு நாடுகளிலும் அதிகரித்து வருகிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications