ஷார்ஜா, துபாயில் மின்சாரம் தாக்கி 2 இந்தியர்கள் பலி
துபாய்: ஷார்ஜா, துபாயில் மின்சாரம் தாக்கி இரு இந்தியர்கள் பலியாயினர்.
கேரளாவைச் சேர்ந்தவர் அனில்குமார் (28). இவர் ஷார்ஜாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். ஷார்ஜா தொழிற்பேட்டை 10வது பகுதியில் அவர் டிரான்ஸ்பார்மர் ஒன்றை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் முஜீப் அல் ரஹ்மான் (43) என்பவரும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ரஹ்மானை மின்சாரம் தாக்கியது. இதையடுத்து அவரைக் காப்பாற்ற அனில்குமார் முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அனில் குமார் உயிரிழந்தார். படுகாயத்துடன் ரஹ்மான் மீட்கப்பட்டார்.
அதேபோல துபாயில் நடந்த மின்சார விபத்தில் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த கபீர் (29) என்பவர் பலியானார். இவர் தனது முகாமில் உள்ள அறையில் இருந்த இரும்புக் கம்பி மீது ஷூவை மாட்டியுள்ளார்.
அப்போது கம்பி வழியாக கசிந்த மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மழை காரணமாக சுவர் ஈரமாக இருந்துள்ளது. இதனால் சுவர் வழியாக கசிந்த மின்சாரம் கம்பி வழியாக பாய்ந்து அதை கபீர் தொட்டபோது பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது.
கபீருக்கு 2 குழந்தைகள் உள்ளனராம். மனைவி, குழந்தைகள் கேரளாவில் வசிப்பதாக சக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications