பாளையங்கோட்டை மத்திய சிறைக்குள் கேமரா செல்போன் பறிமுதல்
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையின் கழிவறையில் ஒரு கேமரா செல்போன், 2 சிம்கார்டுகள், சார்ஜர் ஆகியவற்றை சிறைக் காவலர்கள் கண்டெடுத்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைச் சாலைகளில் கைதிகளின் அறைகளை போலீசார் அடிக்கடி சோதனையிட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட சோதனைகளில் ஏராளமான விலை உயர்ந்த செல்போன்கள், சிம் கார்டுகள், போதை பொருட்கள் ஆகியவை சிக்கின.
இந்நிலையில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள உள் சிறையில் செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் உள்ளதாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சிறை காவலர்கள் திடீரென உள்சிறை மற்றும் வெளிசிறைகளில் சோதனை நடத்தினர்.
சோதனையின்போது உள் சிறையில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள 2ம் பிளாக் அருகேயுள்ள கழிவறையில் 1 கேமிரா செல்போன், 2 சிம்கார்டு, 1 செல்போன் பேட்டரி, 1 செல்போன் சார்ஜர் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். செல்போன் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவத்தை அடுத்து தண்டனை கைதிகளிடம் சிறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications