மும்பை-10 வயது சிறுமியை கற்பழித்த டாக்டர் கைது
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை யில் 10 வயது சிறுமியை கற்பழித்த டாக்டரும் அவருக்கு உதவி செய்த கம்பவுண்டரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை, கொரகாவ்ன் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் ஆர்.எஸ்.திவாரி. இவர் தனது மருத்துவமனையின் காம்பவுண்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை உள்ளே அழைத்து வருமாறு கம்பவுண்டர் சங்கர் மோரேவிடம் கூறியுள்ளார்.
சிறுமியை கம்பவுன்டர் மோரே ஏமாற்றி உள்ளே அழைத்து வந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்குள் வைத்து அந்த சிறுமியை திவாரி கற்பழித்துள்ளார்.
இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீசார் டாக்டரை இன்று கைது செய்தனர். கற்பழிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications