10, 12ம் வகுப்பு தேர்வுகளில் பிட் அடித்தால் கடும் நடவடிக்கை
சென்னை: எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரிகுலேசன் மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையுடன் கூடிய நோட்டீஸ்களை தேர்வு மையங்களில் ஒட்ட பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 12ம் வகுப்பு தேர்வு வரும் மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது. அதே போல் மெட்ரிகுலேசன் தேர்வு மார்ச் 25ம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு மார்ச் 27ம் தேதியும் தொடங்குகின்றன.
இந்த 3 தேர்வுகளிலும் 7 லட்சம் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு எழுதுகிறார்கள். இதற்காக 5,000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் தேர்வுகளில் காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடக் கூடாது. அப்படி ஈடுபட்டால் எடுக்கப்படும் கடும் நடவடிக்ைகளை விளக்கும் நோட்டீஸ்கள் பள்ளிகளில் ஒட்டப்படவுள்ளன.
மொத்தம் 15 ஆயிரம் நோட்டீஸ்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை அந்தந்த தேர்வு மையங்களுக்கு கல்வித்துறை அனுப்பி வைத்துள்ளது,.
இந்த சுவரொட்டியை தேர்வுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. இந்த சுவரொட்டிகளில் இடம் பெற்றுள்ள எச்சரிக்கை வாசகங்கள் வருமாறு:
காப்பி அடித்தல்:
பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேசன் பள்ளித்தேர்வர்கள் (மாணவ-மாணவிகள்), தனித் தேர்வர்கள் ஆகியோர் கவனத்திற்கு,
தேர்வறையில் அனைத்து மாணவர்களும், மாணவிகளும் துண்டுத்தாள்கள் வைத்திருக்கக்கூடாது.
செல்போன்கள் வைத்திருக்கக்கூடாது.
வினாத்தாள், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள் மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீனங்களில் ஈடுபட்டால் மாணவர்களுக்கு 1 வருடம் முதல் 5 ஆண்டு வரை அல்லது நிரந்தரமாக தொடர்ந்து படிக்கத் தடை ஏற்படும்.
தேர்வு எழுத தடை, மதிப்பெண் சான்றிதழ் ரத்து செய்தல் ஆகிய தண்டனைகளை சந்திக்க நேரிடும். இதனால் எதிர்காலமே பாதிக்கலாம்.
எனவே மாணவர்களே தேர்வில் ஒழுங்கீனங்களில் ஈடுபட வேண்டாம்.
இவ்வாறு அந்த சுவரொட்டிகளில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த சுவரொட்டிகள் ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. அவர்கள் மூலம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள
ஒவ்வொரு பள்ளிகக்கும் இந்த சுவரொட்டியை வழங்கி, தேர்வு தொடங்குவதற்கு முன்பாக பள்ளி முன்பு சுவரில் ஒட்டப்பட உள்ளன.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications