புலிகள் ஊடுறுவலை தடுக்க திருமா. கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil


அரியலூர்: தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஊடுறுவலைத் தடுக்க முதல்வர் கருணாநிதி போதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்குமாறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

அரியலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

விடுதலைப் புலிகள் தமிழகத்தில் ஊடுறுவாமல் தடுக்க தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதுதொடர்பான போதிய நடவடிக்கைகளை முதல்வர் கருணாநிதி எடுத்துள்ளார்.

அதேபோல, இலங்கை அரசுக்கு மத்திய அரசு எந்தவித ராணுவ உதவியையும் அளிக்கக் கூடாது. அது அப்பாவித் தமிழர்களுக்கு பாதகமாக அமையும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக அரியலூர் மாவட்டம் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. இதேபோல கோவை, கடலூர், விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களையும் பிரிக்க அரசு நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+