கைதான 5 மலேசிய தமிழர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு
கோலாலம்பூர்: உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து மலேசியத் தமிழர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) நிர்வாகிகளான உதயக்குமார் உள்ளிட்ட 5 பேர், பிரிவினைவாதத்தைத் தூண்டியதாக கூறி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எந்தவித விசாரணையும் இன்றி, கால வரையின்றி சிறையில் வைக்க இந்த சட்டம் வகை செய்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், மனித உரிமை அமைப்புகள் இந்த சட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளன.
இந்த நிலையில் தங்களை காலவரையின்றி, விசாரணையின்றி சிறையில் அடைத்திருப்பதை கண்டித்து, ஐந்து தமிழர்களும், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை முதல் இவர்கள் தங்களது போராட்டத்தைத் தொடங்குகின்றனர். ஆரம்பத்தில் ஐந்து நாட்களுக்கு தண்ணீர் மட்டும் அருந்த முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு தண்ணீர் குடிப்பதையும் நிறுத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஹிண்ட்ராப் கணக்கு-வழக்கு குறித்து விசாரணை:
இதற்கிடையே, ஹிண்ட்ராப் அமைப்பின் கணக்கு வழக்குகள் குறித்து மலேசிய அரசு தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.
மலேசிய அரசின் உத்தரவின் பேரில் இந்த விசாரணையை காவல்துறை மேற்கொண்டுள்ளது. கடந்த மாதம் உதயக்குமார் உள்ளிட்ட 5 நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட பின்னர் இந்த விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
பல கோடி பணத்தை ஹிண்ட்ராப் நிர்வாகிகள் முறைகேடு செய்துள்ளதாக மலேசிய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
சிறப்பு வழிபாட்டுக் கூட்டங்கள், ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் நன்கொடைகள் மூலம் ஹிண்ட்ராப் அமைப்பு 7 லட்சம் ரிங்கிட்டுக்களை (2.15 லட்சம் அமெரிக்க டாலர்கள்) ஹிண்ட்ராப் வசூலித்ததாகவும், அந்தப் பணத்தை தவறான முறையில் அது பயன்படுத்தியுள்ளதாகவும் மலேசிய அரசு கூறுகிறது.
இந்த விசாரணை குறித்து டிஐஜி இஸ்மாயில் உமர் கூறுகையில், ஹிண்ட்ராப் அமைப்பு வசூலித்த பணத்தை தவறான முறையில் பயன்படுத்தியுள்ளதாக எங்களுக்குப் புகார் வந்துள்ளது. எனவே அதுகுறித்து விசாரித்து வருகிறோம்.
இந்தப் பணத்தை ஹிண்ட்ராப் நிர்வாகிகள் சுய லாபத்திற்காக பயன்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு வந்துள்ளது. எனவே இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications