கோவா சிக்கல் தீர்ந்தது - அதிருப்தியாளர்களுக்கு அமைச்சர் பதவி
டெல்லி: கோவா காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஏற்பட்ட சிக்கல் தீர்ந்துள்ளது. முதல்வர் திகம்பர் காமத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் இருவருக்கும் அமைச்சர் பதவி வழங்க காங்கிரஸ் கட்சி ஒப்புக் கொண்டுள்ளது.
கோவாவில் காங்கிரஸ் அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்து வருகிறது. சமீபத்தில் இந்தக் கட்சியைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏக்களும், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏவும் திடீரென அரசுக்கு அளித்து வரும் வாபஸை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். இதனால் காமத் அரசு கவிழும் ஆபத்து ஏற்பட்டது.
உடனடியாக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. காமத் டெல்லி விரைந்தார். தனது அரசைக் கவிழ்க்க நில மாபியா கும்பல் முயற்சிப்பதாக காமத் குற்றம் சாட்டினார். பாஜக அவர்களைத் தூண்டி விட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் டெல்லிக்கு அழைக்கப்பட்ட இரு தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பிரபுல் படேல் பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்று முழுவதும் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியில், தொடர்ந்து அரசுக்கு ஆதரவு தர இரு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ஒப்புக் கொண்டனர்.
இதேபோல சுயேச்சை எம்.எல்.ஏ விஸ்வஜித் ராணேவும் தனது ஆதரவைத் தொடர்ந்து தருவதாக அறிவித்தார். இதன் மூலம் நான்கு நாட்களாக கோவாவில் நிலவி வந்த அரசியல் ஸ்திரத்தன்மை முடிவுக்கு வந்துள்ளது.
சமரச பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இரு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர் பதவி தர காங்கிரஸ் கட்சி ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
உடன்பாடு தொடர்பான விவரங்களை கோவா முதல்வர் காமத், கோவா திரும்பியதும் அறிவிப்பார் என்று பிரபுல் படேல் தெரிவித்தார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா கொடுத்த கிரீன் சிக்னல்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications