உசிலம்பட்டி அருகே 400 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 400 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மதுரை அதன் சுற்றுப்புறங்களில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகள் அதிரடி சோதனை செய்து நடவடிக்கை எடுத்தாலும் ரேஷன் அரிசி கடத்தல் சற்றும் குறையவில்லை.
இந்நிலையில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே லாரி மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நுகர்பொருள் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதிகாரிகள் விரைந்து சென்று உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டி-தும்மக்குண்டு சாலையில் வந்து கொண்டிருந்த ஒரு லாரியை நிறுத்தினர்.
அதிகாரிகள் நிற்பதை பார்த்த லாரி டிரைவரும், கிளீனரும் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அதிகாரிகள் அந்த லாரியை சோதனை செய்த போது அதில் 400 மூட்டைகள் ரேஷன் பச்சரிசி இருந்தது. இதன் மதிப்பு ரூ.2.80 லட்சமாகும்.
உசிலம்பட்டி வழியாக இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்த முயற்சித்தது தெரிய வந்தது. லாரியையும், கடத்த முயன்ற அரிசியையும் தமிழ்நாடு நுகர்பொருள் கிடங்கில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications