Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முஹரம்-உபி கலவரத்தில் 7 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil


லக்னோ: உ.பி. மாநிலத்தில் நடந்த முஹரம் ஊர்வலத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் போலீஸார் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் நேற்று முஹரம் அனுசரிக்கப்பட்டது.

இந்தியாவில் பல இடங்களில் அமைதியான முறையில் முஹரம் ஊர்வலங்கள் நடந்தன. உ.பி. மாநிலம் லக்கிபூர் மாவட்டத்தில் நடந்த ஊர்வலத்தில் திடீரென வன்முறை வெடித்தது.

அகர் புஜுர்க் என்ற இடத்தில் ஊர்வலம் வந்தபோது, இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் ஊர்வலம் அந்தப் பாதை வழியாக செல்லக் கூடாது என்று தடுத்தனர்.

இதையடுத்து இரு பிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் கல் வீசித் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து வன்முறையைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். கண்ணீர்ப் புகை குண்டுகளும் வீசப்பட்டன.

ஆனால் கூட்டத்தினர் கலையாமல் போலீஸார் மீதும் தாக்குதலில் இறங்கினர். போலீஸ் தடியடி மற்றும் கல்வீச்சில், ஒரு போலீஸ்காரர் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து போலீஸார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து கலவரம் தணிந்தது, கூட்டத்தினர் கலைந்து ஓடினர்.

கெளசாம்பி என்ற இடத்தில் ஊர்வலத்தில் ஒரு பிரிவினர் புகுந்து செங்கற்களால் தாக்கினர். இதில் 2 பேர் காயமடைந்தனர்.

ஆந்திராவில்..:

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில், உந்தக்காலு என்ற கிராமத்தில் முஹரம் ஊர்வலத்தின்போது கோஷ்டி மோதல் மூண்டது. இதையடுத்து அந்தக் கிராமத்தில் 144 தடையுத்தரவை போலீஸாப் பிறப்பித்தனர்.

இஸ்லாமியர்களில் இரு பிரிவினர் கம்புகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீஸார் விரைந்து சென்று தடியடி நடத்தியும், வானை நோக்கி சுட்டும் கூட்டத்தினரைக் கலைத்தனர்.

இதில் காயமடைந்தவர்கள் பெல்லாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மும்பையில் அமைதி:

மும்பையில் அமைதியான முறையில் முஹரம் ஊர்வலம் நடந்தது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.

அலங்கரிக்கப்பட்ட தாஸியாக்கள் (நபிகள் நாயகத்தின் பேரன் இமாம் உசேனின் கல்லறையின் மாதிரிதான் தாஸியா) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

வெறும் கால்களுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் நடந்து சென்றனர். தங்களது மார்புகளில் கத்திகளாலும், வாள்களாலும் யா ஹசன், யா ஹூசேன் என்று கூறிக் கொண்டே அடித்தபடி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் சென்றனர்.

ஷியா முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் சந்தர்ஸ்ட் சாலையில் உள்ள முகல் மசூதியில் பெரும் திரளான முஸ்லீம்கள் கூடி ஊர்வலத்தை தொடங்கினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+