அமெரிக்காவில் ஜார்க்கண்ட் ஆய்வு மாணவர் சுட்டுக் கொலை

ஜாம்ஷெட்பூர்: அமெரிக்காவில் மீண்டும் ஒரு இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில், ஆந்திராவைச் சேர்ந்த இரு ஆய்வு மாணவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் ஒரு இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் துர்ஹாமில் உள்ள ட்யூக் பல்கலைக்கழகத்தில், கம்ப்யூட்டர் அறிவியல் பிரிவில் பி.எச்.டி. ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு வந்தார் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் அருகே உள்ள கமாரியா என்ற பகுதியைச் சேர்ந்த அபிஜித் மஹதோ (29). கடந்த 2 ஆண்டுளாக இவர் ஆய்வுப் படிப்பில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று திடீரென மஹதோ அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பதற்கான காரணம் தெரியவில்லை.
கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் படித்த அபிஜித் பின்னர் கான்பூர் ஐஐடியில் பி.டெக் முடித்தார். அதன் பின்னர் ஆய்வுப் படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.
இவரது தந்தை சீதாராம் மஹதோ ஓய்வு பெற்ற தபால் ஊழியர் ஆவார். மஹதோவின் மரணச் செய்தி கேட்டு அவரது குடும்பம் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளது.
அடுத்தடுத்து 3 ஆய்வு மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு வரும் இந்திய மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
-
வெறும் 12 நிமிடங்களில் ரூ.94.5 லட்சம் கோடி லாபம்.. ஒரே நாளில் எல்லாம் மொத்தமா மாறிடுச்சு -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications