மும்பையில் ஏப். 8ல் மிஸ் அரவாணி அழகிப் போட்டி
மும்பை: இந்தியாவில் உள்ள அரவாணிகளுக்கான மிஸ் அரவாணி அழகிப் போட்டி மும்பையில் ஏப்ரல் 8ம் தேதி நடைபெறவுள்ளது. உலகிலேயே அரவாணிகளுக்கான அழகிப் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
நாடு முழுவதிலும் உள்ள அரவாணிகளுக்காக நடத்தப்படும் இப்போட்டியில் வெற்றி பெறும் அரவாணிகளுக்கு மிஸ் அரவாணி பட்டம் வழங்கப்படும்.
மிஸ் அரவாணிப் போட்டியோடு பேஷன் ஷோவும் நடத்தப்படவுள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான அரவாணிகள் பெயர் கொடுத்துள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ள டெல்லியைச் சேர்ந்த சுஷில் குமார் சிங் கூறுகையில், இதுவரை 1000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இன்னும் பலர் விண்ணப்பங்களை கேட்டு வருகின்றனர்.
மும்பையில் மட்டும் 20 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். முதல் நாளிலேயே 200 பேர் விண்ணப்பம் பெற்றனர்.
பெரிய பெரிய நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ளன.
மும்பை தவிர டெல்லி, கொல்கத்தா, பாட்னா, போபால், சென்னை, பெங்களூர், கோரக்பூர் ஆகிய ஊர்களிலிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இப்போட்டியில் 18 வயது முதல் 30 வயது வரையிலான அரவாணிகள் கலந்து கொள்ளலாம்.
இதுவரை விண்ணப்பம் அளித்துள்ளவர்கள் 18 முதல் 23 வயது வரையிலானவர்களாக உள்ளனர்.
இப்போடிக்கான நடுவர்களாக பணியாற்ற அரவாணிகள் சமூகத்தைச் சேர்ந்த பிரபலங்களான ஷப்னம் மாசி, காலி ஹிஜ்ரா, ஆஷா தேவி ஆகியோரை அணுகியுள்ளோம். இதுதவிர சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பிரபலங்களையும் நடுவர் குழுவில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications