காதலிக்க மறுத்த தங்கை மீது ஆசிட் வீசிய 'நவீன அண்ணன் ' கைது
நாமக்கல்: நாமக்கல் அருகே காதலிக்க மறுத்த தங்கை மீது ஆசிட் வீசிய நவீன அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், மங்களபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் ஷீலா கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவர் ஷீலாவுக்கு அண்ணன் முறை உறவினர் ஆவார்.
தங்கை முறை உள்ள ஷீலாவை ஆறுமுகம் ஷீலாவை காதலிக்க தொடங்கினார். ஷீலா கல்லூரிக்கு செல்லும் போது தொடர்ந்து சென்று கேலி கிண்டல் செய்வது என ரகளை செய்துள்ளார்.
ஆனால் ஷீலா இதை கண்டு கொள்ளவில்லை. பின்னர் திடீரென்று ஷீலாவிடம் தனது காதலை ஆறுமுகம் வெளிப்படுத்தியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷீலா ஆறுமுகத்தின் காதலை ஏற்க மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், ஷீலா வீட்டில் குளிக்கும் போது மறைந்திருந்து அவர் மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் ஷீலாவின் உடல், முகம் மீது ஆசிட் பட்டதால் அவரது முகம் மற்றும் கழுத்து பகுதி வெந்தது. பின்னர் அவரை உறவினர்கள் காப்பாற்றி சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து மங்களபுரம் போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலிக்க மறுத்த தங்கையின் அண்ணன் ஆசிட் வீசிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications