ரூ. 1 லட்சம் மோசடி: மதபோதகர்-மனைவி தலைமறைவு
பாவூர்சத்திரம்: வாலிபரின் நோயை குணப்படுத்துவதாக கூறி அவரது பெற்றோரிடம் ரூ. 1 லட்சம் மோசடி செய்துவிட்டு தலைமறைவான மதபோதகர் தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூரை சேர்ந்த சுப்பிரமணியன்-ராஜபொன்னம்மாள் தம்பதியின் மகன் முருகனுக்கு சில ஆண்டுகளுக்கு முன் காலில் புண் ஏற்பட்டது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை.
இதற்கிடையில் இவர்கள் வீட்டு அருகில் வசித்து வந்த மத போதகர் ஜெயராஜ் நெல்லையில் எனக்கு தெரிந்த பிரபல டாக்டர் ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் காட்டினால் நோய் குணமாகும் என்றும் பணம் அதிகம் செலவாகும் என்றும் கூறினார்.
அவரின் பேச்சை நம்பிய முருகனின் பெற்றோர் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 130 கிராம் தங்கச் செயின் மற்றும் ரூ.1,000 பணத்தையும் கொடுத்துள்ளனர்.
அதன்பிறகு ஜெயராஜ் தனது மனைவியுடன், சுப்பிரமணியன் குடும்பத்தினரை நெல்லைக்கு அழைத்து வந்தார். நெல்லை ஜங்ஷனில் உள்ள ஒரு கோவிலில் உட்கார வைத்துவிட்டு நகையை அடகுவைத்து பணத்தை வாங்கி வருவதாக சென்ற ஜெயராஜூம், அவரது மனைவியும் திரும்பி வராமல் தலைமறைவாகி விட்டனர்.
நகையுடன் தலைமறைவான மதபோதகர் தம்பதியினரை சுப்பிரமணியன் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரைப் பற்றிய எந்த துப்பும் கிடைக்காததால் சுப்பிரமணியன் குடும்பத்தினர் நெல்லை டிஐஜி கண்ணப்பனை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
இந்த மனு குறித்து விசாரணை நடத்தும்படி பாவூர்சத்திரம் போலீசுககு உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் ஜமால் விசாரணை நடத்தி ரூ.1 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக உள்ள மதபோதகர் தம்பதியினரை தேடி வருகிறார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications