மது ஒழிப்பு-குமரி முதல் சென்னை வரை ராமதாஸ் வாகன பிரச்சாரம்
பூதப்பாண்டி: மது ஒழிப்பை வலியுறுத்தி குமரி முதல் சென்னை வரை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் வாகன பிரச்சாரம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதாவது,
தமிழகத்தில் மது ஒழிப்பை வலியுறுத்தி அடுத்த மாதம் கன்னியாகுமரி முதல் சென்னை வரை டாக்டர் ராமதாஸ் தலைமையில் வாகன பிரசாரம் நடைபெறும்.
தற்போது அரசு 500 சதுரடியில் வீடு கட்டும் நடுந்தர குடும்பத்தினருக்கு நுகர்பொருள் வாணிக கழகம் மூலம் வழங்கப்படும் சிமென்ட் மூடைகளை 400 மூடையாக உயர்த்தி வழங்க வேண்டும்.
முக்கடல் அணையை தூர்வார வேண்டும். உலக்கை அருவி திட்டத்தை விரைவில் அமுல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு கேரளாவுக்கு ஆண்டுதோறும் 1 லட்சம் லிட்டர் பாலும், 10,000 டன் அரிசியும் வழங்கி வருகிறது.அதே போல் கேரளாவும் நட்புணர்வோடு பெரியாறில் தண்ணீர் தர முன்வர வேண்டும். இதற்காக கேரளாவுடன் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications