இந்தியா ஏவியது இஸ்ரேலின் உளவு செயற்கைக் கோள்!
லண்டன்: இந்தியா ஏவிய இஸ்ரேலிய செயற்கைக் கோள் ஈரானை உளவு பார்ப்பதாக விண்ணில் செலுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து நேற்று காலை இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இஸ்ரேல் நாட்டு செயற்கைக் கோளான போலாரிஸ் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இது வானிலை ஆய்வுக்கான செயற்கைக் கோள் என இஸ்ரேல் கூறினாலும் இது ஒரு உளவு செயற்கைக் கோள், பாதுகாப்பு காரணங்களுக்காக ஏவப்பட்டதாக லண்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலாரிஸ் என்ற இந்த செயற்கைக் கோளின் தொழில்நுட்பப் பெயர் டெக்ஸார் (TECSAR). முழுக்க முழுக்க உளவு பார்க்கும் பணிகளுக்காக பயன்படுவது. இஸ்ரோ இந்த செயற்கைக் ேகாளை தனது ராக்கெட் மூலம் ஏவிய வினாடியில் இருந்து இது இஸ்ரேலிய ஏரோஸ்போஸ் நிறுவனமான ஐஏஐயின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது என இஸ்ரேலிய நாளிதழான ஹரெட்ஸ் தெரிவித்துள்ளது.
கடும் மேக மூட்டங்களுக்கு இடையில் கூட தரையில் உளவு பார்க்க இந்த செயற்கைக் கோள் ரேடார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தம் அதிநவீன சாட்டிலைட்டாகும். இதுவரை இஸ்ரேல் ஏவிய செயற்கைக் கோள்கள் கேமராக்களை சார்ந்தே இயங்குபவையாகும். இப்போது தான் ரேடார் கொண்ட உளவு செயற்கைக் கோளை இஸ்ரேல் ஏவியுள்ளது.
இதுவரை இஸ்ரேல் 11 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. இதில் பெரும்பாலானவை உளவு பார்க்க பயன்படுபவையாகும். இது தவிர மேலும் இரு செயற்கைக் கோள்களையும் இஸ்ரேல் ஏவ இருப்பதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து இஸ்ரோ தலைவர் மாதவன் நாயரிடம் கேட்டபோது, அது என்ன வகையான செயற்கைக் கோள் என்பது எனக்குத் தெரியாது. அது உளவு செயற்கைக் கோளா என்றும் தெரியாது. அதை நான் வெளியில் இருந்து மட்டுமே பார்த்தேன் என்றார் சுருக்கமாக.
இந்த செயற்கைக் கோளை இஸ்ரேலுக்காக ஏவ வேண்டாம் என இந்தியாவுக்கு அமெரிக்கா நெருக்குதல் தந்ததாகவும் ஒரு தகவல் வருகிறது. ஈரான் அமைத்து வரும் அணு உலையை தாக்கி அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளத் கூறப்படும் நிலையில், அப்படிப்பட்ட தாக்குதலை அமெரிக்கா விரும்பவில்லை என்றும், இதனால் தான் அந்த செயற்கைக் கோளை ஏவ இஸ்ரேலுக்கு உதவவில்லை என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications