லாரி ஸ்டிரைக் வாபஸ்-பெங்களூரில் மீண்டும் டிராபிக் ஜாம்
பெங்களூர்: கர்நாடகத்தில் நடந்து வந்த லாரிகள், டாக்சிகள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக வட மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் முடங்கியிருந்த தமிழக லாரிகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன.
கர்நாடக அரசு அனைத்து வாகனங்களிலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக டாக்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆனால், இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத சாப்ட்வேர் நிறுவன வாடகை வாகனங்கள் மீது ஆங்காங்கே தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து சாப்ட்வேர் நிறுவனங்களுக்காக இயக்கப்படும் பஸ், வேன், கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதனால் சாப்ட்வேர், பிபிஓ, கால் சென்டர் நிறுவன ஊழியர்களும் பெரும் சிரத்துக்கு ஆளாயினர்.
தமிழகத்தில் இருந்து தினமும் 5,000க்கும் மேற்பட்ட லாரிகள் கர்நாடகம் வழியாக வட மாநிலங்களுக்கு சென்று வருகின்றன. இந் நிலையில் இந்த வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு எடுத்து செல்லப்படும் பொருட்கள் முடங்கின.
இதனால் ஏற்கனவே சரக்குகளுடன் வட மாநிலங்களுக்கு கிளம்பிய தமிழக லாரிகள், பாதி வழியிலும், கர்நாடக மாநிலத்தில் பல பகுதிகளிலும் ரோட்டோரங்களிலும் சோதனைச் சாவடிகளிலும் நிறுத்தப்பட்டன. ஓசூர் முழுவதும் வரிசையாக சரக்கு லாரிகள் ஆயிரக்கணக்கில் வரிசையாக நிறுத்தப்பட்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த ஸ்டிரைக்கால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தேக்கமடைந்து வீணாகும் நிலை ஏற்பட்டது. இதனால் தமிழகத்திற்கு தினமும் ரூ. 100 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வந்தது.
பேச்சுவார்த்தை வெற்றி:
இந்நிலையில், கர்நாடக லாரி உரிமையாளர் சங்கத்தினருடன் அரசு பிரதிநிதிகள் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், புதிய வாகனங்களில் மட்டுமே வேக கட்டுப்பாடு கருவி பொருத்தினால் போதும் பழைய வாகனங்களுக்கு பொறுத்த வேண்டியதில்லை என கர்நாடக அரசு அறிவித்தது.
ஸ்டிரைக் வாபஸ்-மீண்டும் டிராபிக் ஜாம்:
இதையடுத்து ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. போராட்டம் வாபஸ் ஆனவுடன் ஆயிரக்கணக்கான லாரிகள் பெங்களூர் வழியாக வேறு மாநிலங்களுக்குச் செல்ல ஆரம்பித்தன. இதனால் நேற்று இரவு முதலே பெங்களூரில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஆரம்பமாகிவிட்டது.
அதே போல சாப்ட்வேர் நிறுவன வாகனங்களும் இயங்க ஆரம்பித்துவிட்டதால் இன்று காலை முதலே நகரின் பல பகுதிகளிலும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்துவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications