கிளிநொச்சி-புலிகளின் முக்கிய தளம் மீது விமானப் படை குண்டுவீச்சு
Subscribe to Oneindia Tamil

கொழும்பு: கிளிநொச்சி மாகாணத்தில் இரணைமடு ஏரிக்கு அருகே உள்ள கலமதுகுளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் மிக முக்கியமான தளத்தின் மீது போர் விமானங்கள் இன்று காலை தாக்குதல் நடத்தியதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.
விமானப் படையின் செய்தித் தொடர்பாளர் விங் கமாண்டர் அண்டி விஜேசூர்யா கூறுகையில், வான் பகுதியில் இருந்தும் தரைப் பகுதியிலும் நடத்தப்பட்ட கண்காணிப்பின் அடிப்படையில் இந்த தளத்தின் மீது கடும் தாக்குதல்கள் இன்று நடத்தப்பட்டன. விமானப் படையின் அதிவேக ஜெட்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள இந்தத் தளத்தைத் தாக்கின.
மிக அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள இந்தத் தளத்தை எக்ஸ்ரே பேஸ் என்று வர்ணிப்பது வழக்கம். இந்தத் தளத்தை புலிகள் மிகப் பாதுகாப்பான ராணுவத் தளம் என்று கூறி வருகின்றனர்.
கிளிநொச்சியில் புலிகளின் மிக முக்கியமான கட்டுப்பாட்டுத் தளம் இது. இந்தத் தளத்துக்கு மிக முக்கியமான விடுதலைப் புலிகள் அமைப்பின் தீவிரவாதி வந்து போவது வழக்கம் என்றார் விஜேசூர்யா.
ஆனால், இந்தத் தாக்குதல் குறித்து புலிகள் தரப்பில் தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications