'டார்கெட்' நிர்ணயித்து போலீஸ் மாமூல் வசூல்-ஜெ குற்றச்சாட்டு
சென்னை: காவல்துறையினர் தினமும் இலக்கு நிர்ணயித்து மாமூல் வசூல் நடத்தி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களிடம் இருந்து குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ரூ.20,000 வரை வசூல் செய்ய வேண்டும் என காவலர்களுக்கு இலக்கு நிர்ணயிப்பதாகவும், இதில் வரக்கூடிய பணம் மேலதிகாரிகளுக்கும் தரப்படுவதாகவும், இதன் மூலம் காவலர்களுக்கு 1,000 ரூபாயும், உதவி ஆய்வாளர்களுக்கு 1,500 ரூபாயும், ஆய்வாளர்களுக்கு 2,000 ரூபாயும், உதவி ஆணையர்களுக்கு அதற்கு மேலும் தினசரி வருமானம் கிடைப்பதாகவும் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு இலக்கு நிர்ணயிக்கப்படுவதால், காவலர்களின் கவனம் போக்குவரத்தை சீர்செய்வதில் செல்லாமல், பணம் வசூலிப்பதிலேயே செல்கிறது என்றும், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் செய்திகள் கூறுகின்றன.
சட்டம், ஒழுங்கு பிரிவில் காவலர்களாக் பணியாற்றும் காவலர்களின் வசூல் வேட்டை இதைவிட அதிகம். உதாரணமாக மாம்பலம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் நடைபாதை வியாபாரிகளிடமிருந்து நாள் ஒன்றுக்கு ரூ.20,000 வீதமும், வணிக நிறுவனங்களிடமிருந்து ரூ.2 லட்சம் வரையிலும், சூதாட்ட மையங்களிலிருந்து பல லட்ச ரூபாயும் வசூல் செய்வதாகவும் செய்திகள் வெளி வந்திருக்கின்றன.
இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து தமிழக அரசோ, காவல்துறை தலைமை இயக்குனரோ இதுவரை அறிக்கை வெளியிடவில்லை. இவர்களின் மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பதற்கு ஏற்ப அரசு உண்மையை ஒப்புக் கொண்டுவிட்டது என்பதே பொருள் என ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications