நெல்லையில் கொடூரம்: 8 மாடுகள் விஷம் வைத்து கொலை
Subscribe to Oneindia Tamil
நெல்லை: பாளையில் 8 மாடுகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டன.
பாளை அருகே உள்ள கீழநத்தம் தெற்கூரில் ஏராளமான வயல்கள் உள்ளன. இங்கு பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்களை அடிக்கடி மாடுகள் மேய்ந்து வந்தன. இதனால் ஆத்திரமடைந்த வயலின் உரிமையாளர் ஒருவர் வாழை பழத்தில் குருணை மருந்தை தடவி வரப்புகளில் வைத்துள்ளார். இதை சாப்பிட்ட மாடுகள் அங்கங்கே இறந்து கிடந்தன.
கீழநத்தத்தை சேர்ந்த மாயாண்டி, நடராஜன் ஆகியோருக்கு சொந்தமான 2 பசு மாடுகளும், சுப்பிரமணியன், ஆறுமுகத்திற்கு சொந்தமான 2 காளை மாடுகளும் இறந்துவிட்டன.
இது தவிர அங்குள்ள காட்டு பகுதியிலும் 4 மாடுகள் இறந்து கிடந்தன. இதைப் பார்த்த அதன் உரிமையாளர் கண்ணீர் வடித்தனர். பின்னர் அவர்கள் போலீசில் புகார் செய்தனர். மாடுகளுக்கு விஷம் வைத்தது யார், என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications