உஷார்.. சென்னையில் போலீஸ் வேடத்தில் நடமாடும் கொள்ளை கும்பல்
சென்னை: சென்னையில் போலீஸ் வேடத்தில் கார்களை மடக்கி ஒரு கும்பல் கொள்ளையடித்து வருகிறது. அந்தக் கும்பலை சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் எழும்பூர், ஐ.சி.எப்., சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் கார்களை மடக்கி கொள்ளை சம்பவங்கள் நடந்தன. போலீஸ் உடையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வாகனங்களை மடக்கி சோதனை செய்வது போல நடித்து காரில் இருந்தவர்களிடம் துப்பாக்கிக் காட்டி பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே காரில் சென்ற பாதிரியாரான ரமேஷ்குமார் என்பவையும் மடக்கி இந்தக் கும்பல் கொள்ளையடித்தது.
அடுத்து மேலும் 4 இடங்களில் போலீஸ் உடையில் வாகன சோதனை நடத்தவது போல நடித்து 3 பேர் கொள்ளையில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ந்து போயுள்ள காவல்துறை இந்தக் கும்பலைப் பிடிக்க தனிப்படையை அமைத்துள்ளது.
துப்புத் துலக்குவதில் எக்ஸ்பர்ட்டான கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் தலைமையில் இந்தப் படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரெளடிகளுக்கு தண்ணி காட்டும் இணை கமிஷனர் ரவி, துணை கமிஷனர் கருப்பசாமி, உதவி கமிஷனர் பாலச்சந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களது மேற்பார்வையில் ஒரு பெரிய டீமே வேட்டையில் இறங்கியுள்ளது.
இந்த டீமின் மின்னல் வேக விசாரணையில் கார்களை மடக்கி கொள்ளையடிக்கும் கும்பலில் உள்ள 3 பேரின் விவரமும் தெரிய வந்துள்ளது. அவர்களது பெயர் விவரம்: கோழிக்கடை கோவிந்தன், சுதா, ஜமால் ஆகியோர்.
ஆந்திராவை சேர்ந்தவனான கோவிந்தன் சென்னை அமைந்தகரை பி.பி.தோட்டத்தில் தாயார் மற்றும் அக்காளுடன் வசித்து வந்தவன்.
சுதா வியாசர்பாடியை சேர்ந்தவன். இவன், கோவிந்தனின் வலது கை. ஜமால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வசிப்பவன்.
பழைய குற்றவாளிகளான இவர்கள் 3 பேருமே பலமுறை சிறைக்குப் போய் வந்தவர்கள். இதில் கோவிந்தன் 3 முறை குண்டர் சட்டத்தில் ஜெயிலுக்கு போய் வந்தவன். ஜமாலும், சுதாவும் 2 முறை குண்டர் சட்டத்தை அனுபவித்தவர்கள்.
கடந்த 10ம் தேதி தான் மூவருமே ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தனர். அதற்குள் 8 இடங்களில் கைவரிசை காட்டிவிட்டனர்.
இந்தக் கும்பலை தேவைப்பாட்டால் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது. இவர்களை அமுக்க ஜாங்கிட் படை மும்முரமாக களமிறங்கியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications