மின் பற்றாக்குறை விரைவில் முற்றிலும் நீங்கும்-ஆற்காடு
சென்னை: கடலூர், நாகை மாவட்டங்களில் மிகப் பெரிய அளவிலான மின் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் மூலம் தமிழக மின்பற்றாக்குறை விரைவில் முற்றிலும் நீங்கும் என்று மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ இ.எஸ்.எஸ்.ராமன் இதுகுறித்து கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ள இந்த இரு பெரும் மின் திட்டங்களால் 18 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மெர்ச்சன்ட் மின் நிலையங்கள் திட்டத்தின் மூலம் இவை நிறைவேற்றப்படும்.
இதன் மூலம் கோடை காலத்தில் தமிழகம் வழக்கமாக சந்திக்கும் மின்பற்றாக்குறை நீங்கும்.
கோடை காலங்களில் பிற மாநிலங்களிலிருந்து தமிழக மின்வாரியம் மின்சாரத்தைப் பெற்று பற்றாக்குறையை சமாளிக்கிறது. ஆனால் இதற்கு நிறைய பணம் செலவாகிறது. ஆனால் மெர்ச்சன்ட் மின் நிலையங்களில் இது மிகவும் குறைவானதாக இருக்கும்.
மெர்ச்சன்ட் மின் நிலயைங்களிலிருந்து யூனிட் ஒன்று ரூ. 2.50க்கு மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் பெறும். இந்த தொகை அதிகரிக்காமல் அரசு பார்த்துக் கொள்ளும்.
தமிழக அரசு மின்பகிர்மான கழகம் ஒன்றை தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த கழகம் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள மின் கிரிடுகள் மூலம் வெளிமாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை செய்யப்படும். இந்தத் திட்டத்திற்கு ரூ. 25 ஆயிரம் கோடி செலவாகும்.
இந்த கோடை காலத்தில் தமிழகம் மின் வெட்டை சந்திக்காமல் அரசு பார்த்துக் கொள்ளும் என்றார் வீராசாமி.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications