குயீன்ஸ்லாண்ட் பூங்கா பொது மேலாளர் கைது

Subscribe to Oneindia Tamil


சென்னை: சென்னை சிறுவர் பூங்காவில் ஏற்பட்ட படகு விபத்தில் 11 வயது சிறுமி குளத்தில் மூழ்கி பலியானது தொடர்பான அந்தப் பூங்காவின் பொது மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அருகே உள்ள குயீன்ஸ்லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க்கின் செயற்கை குளத்தில் படகுகளில் மக்கள் சவாரி செய்து கொண்டிருந்தபோது இரு படகுகள் மோதிக் கொண்டது.

இதில் ஒரு படகு கவிழ்ந்ததில் அதிலிருந்தவர்கள் நீருக்குள் விழுந்தனர். இந்த விபத்தில் மேடவாக்கத்தைச் சேர்ந்த ராஜ் என்பவரின் மகள் அனுசுயா (11) நீருக்குள் மூழ்கி இறந்துவிட்டார்.

அந்த குளத்தில் ேபாதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. மேலும் சிறிமியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக் கூட பூங்கா நிர்வாகம் உதவவில்லை. மகளை தோளில் போட்டுக் கொண்டு 4 கி.மீ. ஓடிச் சென்று தான் ஒரு வாகனத்தைப் பிடித்து மருத்துவமனையை அடைந்துள்ளார் ராஜ். அதற்குள் அந்த சிறுமி இறந்துவிட்டாள்.

இதையடுத்து படகு டிரைவர்கள் ஜெகநாதன், முனுசாமி, படகு உதவியாளர்கள் ஆனந்த், செல்வம், மேலாளர்கள் மணிகண்டன், சோமசுந்தரம், துணைப் பொது மேலாளர் ஷிபான் பான்(50) ஆகியோர் மட்டும் கைது செய்யப்பட்டனர்.

இந் நிலையில் பூங்காவின் பொது மேலாளரான தமிழ்மணியும் இன்று கைது செய்யப்பட்டார்.

இச் சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணையும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+