சேலம் அருகே உயிருடன் புதைக்கப்பட்ட மாணவர் மீட்பு
சேலம்: சேலம் அருகே ஐடிஐ படிக்கும் மாணவரை உயிருடன் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் முத்தனம்பட்டியைச் சேர்ந்த சூசன் என்பவரின் மகன் ஈஸ்வரன்(20). இவர் அப்பகுதியில் உள்ள ஐடிஐயில் படித்து வருகிறார்.
வழக்கம்போல் நேற்று காலை ஐடிஐக்கு சைக்கிளில் செல்லும் போது, அப்பகுதியில் உள்ள சுடுகாடு அருகே 3 வாலிபர்கள் வழிமறித்தனர். அவரது முகத்தில் மயக்கப் பொடியை தூவிவிட்டு உயிருடன் அவரை சுடுகாட்டில் புதைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
சுடுகாடு வழியே வந்த வாலிபர் ஒருவர் புதைக்கப்பட்ட ஈஸ்வரன் கால் மட்டும் வெளியே அசைந்ததைப் பார்த்துவிட்டு அருகில் சென்று பார்த்தார். அப்போது முனகல் சத்தமும் கேட்கவே அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர் மணலை அகற்றிவிட்டு ஈஸ்வரனை வெளியில் இழுத்தார்.
மயக்க நிலையில் இருந்த ஈஸ்வரன் முகத்தில் தண்ணீர் தெளித்தவுடன் அவர் சுய நினைவுக்கு திரும்பினார். பின்னர் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஈஸ்வரனின் தந்தை தனது மகனை புதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் செய்துள்ளார்.
இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications