காதலிக்க மறுத்த பெண்ணை விபச்சாரியாக சித்தரித்தவருக்கு ஜெயில்
சென்னை: காதலிக்க மறுத்த இளம்பெண்ணை விபச்சாரியாக சித்தரித்து இன்டர்நெட்டில் ஆபாசமாக தகவல் வெளியிட்ட என்ஜீனியருக்கு சென்னை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர் சுகாஷ் கட்டி(32). இவர் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது உடன் படித்த சென்னையை சேர்ந்த மாணவியை காதலித்துள்ளார். அந்த மாணவியை காதலிக்க பல மாணவர்களும் போட்டி போட்டுள்ளனர்.
ஆனால் அந்த பெண் ஒருவரின் காதலை மட்டும் ஏற்றுக்கொண்டு சுகாஷ் கட்டி உட்பட மற்ற ஆண்களின் காதலை நிராகரித்து விட்டாராம்.
இதையடுத்து அனைவரும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு அவரவர் ஊருக்கு சென்றுவிட்டனர்.
ஆனால் அந்தப் பெண் தன்னை காதலிக்காத ஆத்திரத்தில் இருந்த சுகாஷ் கட்டி அவரை விபச்சாரியாக சித்தரித்து இன்டர்நெட்டில் தகவல் வெளியிட்டுள்ளார். கால் கேர்ள் தேவைக்கு இந்தப் பெண்ணை அணுகலாம் என்று தகவல் தந்து, அவரது தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து பலரும் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதிர்ச்சியடைந்த அந்த பெண் சென்னை சைபர்கிரைம் போலீசாரிடம் புகார் செய்தார்.
அவர்கள் விசாரணை நடத்தி சுகாஷ் கட்டியை மும்பையில் வைத்து கைது செய்து சென்னை கொண்டு வந்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்தது.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சுகாஷ் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சுகாஷ்கட்டியின் வயதையும், படிப்பையும் கருத்தில் கொண்டு அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை 8 மாதமாக குறைத்து தீர்ப்பளித்தார்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications