அணு சக்தி ஒப்பந்தத்தை அரசு நிறைவேற்றலாம்: உச்சநீதிமன்றம்
டெல்லி: அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. அரசே அதை நிறைவேற்றலாம் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. இதனால் அணு சக்தி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து வரும் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரவி பிரகாஷ் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பில்,
மத்திய அரசு சர்வதேச அளவில் எந்த ஒப்பந்தம் செய்தாலும், அதை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பின்னரே செய்ய வேண்டும் என்று அரசியல் சட்டத்தின் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அப்படி ஏதாவது இருந்தால் அதை மனுதாரர் தாராளமாக தெரிவிக்கலாம்.
இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விவகாரத்திலும் இது பொருந்தும். இந்த ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றத்தில் அரசு ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை. தானாகவே கையெழுத்திட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும் என்று அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மத்திய அரசுக்கு புது உற்சாகத்தை அளிக்கும் எனத் தெரிகிறது. மேலும் அணு சக்தி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து வரும் இடதுசாரிகள் மற்றும் பிற எதிர்க்கட்சிகளுக்கு இது பெருத்த பின்னடவை ஏற்படுத்தும்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications