அம்பேத்கர் சிலையின் கை சேதம்-காரைக்குடியில் பெரும் பதட்டம்

காரைக்குடி: காரைக்குடியில் அம்பேத்கர் சிலையின் கை சேதப்படுத்தப்பட்டதால் அங்கு பதட்டம் நிலவுகிறது. சிலையை சேதப்படுத்திய விஷமிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
காரைக்குடி செக்காலை ரோட்டில் நகராட்சி விருந்தினர் பங்களா அருகே உள்ள டாக்டர் அம்பேத்கரின் ஆளுயர சிமென்ட் சிலையின் கை சேதப்பட்டப்பட்டதை சிலர் பார்த்து பதட்டம் அடைந்தனர். இந்த செய்தி நகர் முழுவதும் விரைவில் பரவியது.
இதையடுத்து பல்வேறு தாழ்த்தப்பட்ட சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சிலையை சேதப்படுத்திய விஷமிகளைக் கைது செய்யக் கோரி அவர்கள் கோஷமிட்டனர். மேலும் 100 அடி சாலையில், பெரியார் சிலை அருகே சாலை மறியலிலும் அவர்கள் குதித்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். காவல்துறை எஸ்.பி. கண்ணன், வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். கூட்டத்தினரை அமைதிப்படுத்தினர். விஷமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
பின்னர் அனைவரும் அம்பேத்கர் சிலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது.
சிலையை சேதப்படுத்திய விஷமிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications