போலி ஜாதி சான்றிதழ்-ஊசலாடும் ஊராட்சி தலைவர் பதவி !
மதுரை: போலி ஜாதிச் சான்றிதழ் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற பள்ளபட்டி ஊராட்சி தலைவரை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டுள்ளதால் ஊராட்சி தலைவரின் பதவி ஊசலாடி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம் பள்ளபட்டியில் ஊராட்சி தலைவராக இருப்பவர் ஜெயா. இவர் உள்ளாட்சி தேர்தலின் போது போலியான ஜாதி சான்று கொடுத்து வெற்றி பெற்றதாக இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த ராணி என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நடத்திய நீதிமன்றம் இதுகுறித்து விசாரணை நடத்த திண்டுக்கல் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு குறித்து ஜெயா, ராணியிடம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் விழிப்புணர்வுக் குழு உறுப்பினர்கள் சிற்றசு, சுமதி ஆகியோர் விசாரித்தனர்.
விசாரணையில் ஜெயா, எஸ்தர் என்ற பெயரில் பள்ளியில் படித்து தெரிய வந்தது.
ஆனால், தான் முதியோர் கல்வியில் படித்தாக பொய்யான தகவல் கொடுத்திருந்தார் ஜெயா.
மேலும் ஜெயா கொடுத்த ஜாதி சான்றும் பொய் என ஆவண ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க குழு பரிந்துரை செய்தது.
இதனால் ஜெயாவின் ஊராட்சி தலைவர் பதவி ஊசலாட்டத்தில் உள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications