குடிநீரில் சாக்கடை: 3 கிராமங்களில் வாந்தி பேதி-200 பேர் பாதிப்பு
நெல்லை: நெல்லை அருகே 3 கிராமங்களில் குடிநீரில் சாக்கடை கலந்ததால் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே உள்ள ராமையன்பட்டியில் நேற்று திடீரென குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலருக்கு வாந்தி பேதி ஏற்பட்டது. இதனால் பாதிப்புக்குள்ளான 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுகாதார மையம், பாளை அரசு மருத்துவமனை, தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.
தச்சநல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் ராமையன்பட்டியை சேர்ந்த முருகேசன், சண்முகவேல், மாரிசெல்வி, தச்சநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மாரிசெல்வன், முத்துசெல்வி, சந்திரா, வள்ளியம்மாள், சந்திரா, பிரியா, வெள்ளப்பாண்டி, ஆகியோரும், பாளை அரசு மருத்துவமனையில் ராதிகா, சீனியம்மாள், ராஜன், சண்முகனி, எலிசபேத், சொள்ளமாரி, கண்ணம்மா, சுடலைமணி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்துக் கூறுகையில் எங்களுக்கு பொது குடிநீர் குழாய் கிடையாது. ஊர் அருகில் இருக்கும் குளத்தில் இருந்து போர் போட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. மாநகர பகுதியில் இருநது வரும் பாதாள சாக்கடை கழிவு நீர், குளத்தின் அருகே கலக்கிறது.
மேலும் குப்பைகளும் குவிந்து கிடக்கின்றன. இதனால் குளத்து நீர் மாசுப்பட்டு வாந்தி, பேதி ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த மலைராஜா எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் ராமையன்பட்டிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனே எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதேபோல தேனீர்குளம், தச்சநல்லூர் ஆகிய கிராமங்களிலும் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை தவிர தச்சநல்லூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர். அங்கு நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications