ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய குடியரசு தின விழா
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியாவின் 59வது குடியரசு தின விழா சனிக்கிழமை பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தூதர் தல்மிஷ் அஹமது தேசியக் கொடியை ஏற்றிவைத்து குடியரசு தின உரை நிகழ்த்தினார்.
அவர் பேசுகையில், அமீரகத்தில் சுமார் ஒன்றரை மில்லியன் இந்தியர்கள் உள்ளனர். இந்திய மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் மிகப்பெரும் சவால்களையும் சாதனைகளாக மாற்ற முடியும்.
இந்தியாவில் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டபோது அமீரகத்தில் உள்ள இந்திய சமூகத்தினரின் உதவிகள் மகத்தானவையாக இருந்தன என்றார்.
பின்னர் கண்வர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
துபாய்:
இதே போல் துபாயிலும் குடியரசு தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
துபாய் இந்திய உயர்நிலைப்பள்ளியில் இந்திய துணைத்தூதர் வேணு ராஜாமணி இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் துபாய் தமிழ்ச் சங்கம், இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) மற்றும் பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன.
இதேபோல் அமீரகத்தின் பிற பகுதிகளான ஷார்ஜா, உம்முல்குவைன், அஜ்மான், புஜைரா, ராசல் கைமா, அல் அய்ன் உள்ளிட்ட பல இடங்களிலும் இந்திய குடியரசு தின விழா வெகு சிறப்புடன் கொண்டாடப்பட்டது.












Click it and Unblock the Notifications